கல்யாண முயற்சி கைகூடும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய பொறுப்புகளால் வேலைப்பளு அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும் நாள். மாமன், மைத்துனர்கள் உங்கள் பணிகளுக்கு உறுதுணையாக இருப்பர். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பாக்கிகள் வசூலாகும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும்.
அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும்.
மன நிம்மதி கிடைத்து மகிழ்ச்சி காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். தாய் வழியில் தனலாபம் கிடைக்கும்.
காரிய வெற்றி ஏற்படும் நாள். மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். சகோதர வழியில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். விரும்பியபடியே ஊர்மாற்றம் அமையும். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெற்று மகிழ்ச்சி காணும் நாள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பர பொருள்கள் வரை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
அலைபேசி வழித்தகவல்களால் அனுகூலம் தரும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அன்பு நண்பர்களின் மூலம் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள் வந்து சேரலாம்.
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். லாபம் இருமடங்காகும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் குதூகலப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
கடமை உணர்வோடு செயல்பட்டு காரிய வெற்றி காணும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிஅனுகூலம் தரும். வீட்டை சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பண வரவு திருப்தி தரும்.
பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். எதிரிகளின்தொல்லை மேலோங்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும்.