பேருந்திற்கு காத்திருந்த பாடசாலை மாணவி திடீர் மரணம்

யக்கல பிரதேசத்தில் மாணவி ஒருவர் திடீரென உயிரிந்ந்த சம்பவம் மாணவர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுbusக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த மாணவி ஒருவரே இவ்வாறு திடீரென உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனை அவதானித்த மாணவர்கள் இருவர் அந்த மாணவியை முச்சக்கர வண்டியின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்ட சென்று சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

16 வயதான சச்சினி கௌசல்யா என்ற இந்த மாணவி யக்கல அநுர மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றார்.மாணவியின் உயிரை காப்பாற்றுவதற்கு வைத்தியர்கள் கடுமையாக போராடியுள்ளனர். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலதிக பரிசோதனைக்காக அவரது சடலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.