கூகுளின் உதவியை நாட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தீர்மானம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கு அமைய கூகுள் இணையத்தளத்தைப் பயன்படுத்தி எல்லை நிர்ணயப் பணிகளை மேற்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

Ranil_wickramasingheC

அந்த வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயப் பணிகளுக்கு கூகுள் மெப்ஸின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக இளைஞர், யுவதிகள் குழுவொன்றை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க தேவை என்றால் அதற்கான வசதிகளை செய்துகொடுக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் முதனிலை தேடு தளங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம், கூகுள் மெப்ஸ் என்னும் நாடுகள், நகரங்கள், கிராமங்களின் வரைபட சேவையையும் வழங்கி வருகின்றது.