பொல்காவளை புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரதமொன்று தடம்புரண்டமை காரணமாக வடக்கு புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமே இன்று காலை 7 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
இதனால் வடக்கு புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு நிலைமையை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.