யாழில் கோர விபத்து!!!!

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2

இந்தச் சம்பவம் நேற்று மாலை ஐந்து மணிளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரது கை மிகவும் சிதைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குப்பிளான் வடக்குச் சந்தியில்இ இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி ஒன்றின்மீது வீதி விதிகளை மீறி வந்த பார ஊர்தி மோதியதாகவும் இதனால் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

v1

பார ஊர்தியினை ஓடிச் சென்ற சாரதி அதிலிருந்து குதித்து தப்பியோடியுள்ளார்.

விபத்துச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தப்பியோடிய சாரதியைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.