உயிரைக் காப்பாற்றியதற்கு ஆயிரம் யுவான் அபராதம்!

மகனின் உயிரைக் காப்பாற்றியதற்கு ‘அபராதமாக’ மருத்துவர் ஒருவர் ஆயிரம் யுவான்களைச் செலுத்திய வினோத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

10_Doctor

சீனாவின் ஹுபே மாகாணத்தில், திடீரென இதய நாளங்களில் ஏற்பட்ட அடைப்பால் நபரொருவர் சுய நினைவின்றி மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், தெய்வாதீனமாக மருத்துவர்களால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

சாதாரண நோயாளர் பகுதிக்கு மாற்றப்பட்ட சிறிது நேரத்தில் அவரின் தந்தை அங்கே வந்தார். அவர், மகனைக் காப்பாற்றியதற்காக குறித்த மருத்துவருக்கு நன்றி தெரிவிப்பதற்கு பதிலாக, மகனின் சட்டையை வெட்டியதற்காக 1500 யுவான்களைத் தருமாறு கேட்டார்.

அவசர நேரத்தில் நோயாளியின் சட்டையை வெட்டியே சத்திர சிகிச்சைகள் வழங்கப்படும். அந்த வழக்கப்படியே குறித்த நபரின் சட்டை வெட்டப்பட்டது.

ஆனால், தந்தையின் நிலையைப் பார்த்து இரக்கப்பட்ட மருத்துவர் சட்டைக்கு நஷ்ட ஈடாக ஆயிரம் யுவான்களைச் செலுத்தினார்.

இச்சம்பவம் இணையத்தில் பரவவே, குறித்த தந்தையைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.