ஆந்திராவில் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவனை வெறிநாய்கள் கடித்து கொண்டிருந்தபோது, அதனை கண்டுகொள்ளாமல் வீடியோ எடுத்த பொதுமக்களின் செயல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள், இவர்கள் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் 4 வயது மகன் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக சென்ற வெறிநாய்கள் சிறுவனை கடித்து குதறியுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் சிறுவனை காப்பாத்தாமல் போனில் வீடியோ எடுத்தனர்.
இதன் பின்னர் சிறுவனின் தந்தை மகனின் நிலைமை கண்டு அலறியடித்து நாயிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
சிறுவனின் உடலில் நாய்கள் பலமாக கடித்ததால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துள்ளான். இந்த செயல் மனிதாபிமானம் இல்லாதததை காண்பிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மீது குற்றம்சாட்டினர்.