சீனாவில் இரண்டு வயது குழந்தை அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு, மரணத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கும் வேளையில், அவரது தந்தை சவக்குழியில் குழந்தையுடன் விளையாடிய சம்பவம் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த சான்ங் க்சின் லெய் [Zhang Xin Lei] என்ற இரண்டு வயது குழந்தை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலசேமியா [Thalassemia] எனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சிகிச்சைக்கு மட்டும் £11,000 பவுணிற்கு அதிகமாக செலவு செய்துள்ளனர்.
பணம் போதாமையினால் தனது நண்பர் மற்றும் உறவினர்களிடம் சிகிச்சைக்காக பணம் வாங்கியுள்ளனர்.
எனினும் தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்வதற்கு பணம் இல்லாமையினால் குழந்தையின் தந்தை இதற்கு மேல் சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்ற எண்ணத்தில், அங்குள்ள ஒரு பகுதியில் சவக்குழி ஒன்றை தோண்டி அங்கு இருவரும் விளையாடி வருகின்றனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை, தனது மகள் தற்போது மரணத்திற்காக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாள். அவளை இங்கு தான் புதைக்க உள்ளோம். அதனால் அவளை தினந்தோறும் இங்கு அழைத்து வந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதை அந்த குழந்தையின் தாய் அருகில் இருந்து கொண்டு பேச முடியாத நிலைமையில் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.