இந்தியாவின் வடக்கு கவுகாத்தி நகரில் “பிஸ்னுபுர் துர்க்கா கோவில்” நிறுவனத்தின் ஏற்பாட்டில், கைவினைஞர்களினால் மூங்கிளை பயன்படுத்தி 101 அடி உயரமான துர்க்கா சிலை உருவாக்கப்படுகின்றது.
இவ்வருடத்தின் துர்க்கா புஜையை முன்னிட்டு, கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சிலை கட்டுமாணம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் மற்றும் மூங்கில் உற்பத்தியை ஊக்கிவிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுவதாக குறித்த கைவினைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சிலையை கட்டி முடிப்பதற்காக 6, 000 7,000 வரையிலான மூங்கில்கள் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இதுவரை கின்னஸ் புத்தகத்தில் 83 அடி உயரமான நார்ப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட துர்காசிலை சாதனையிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், வட இந்தியர்கள் வருடா வருடம் நவராத்திரி பூஜையின் போது இறுதி மூன்று நாட்களையும் துர்க்கா பூஜையாக, வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இறுதி நாள் கடலில் துர்க்கா சிலையை கரைத்து பூஜையை நிவர்த்தி செய்து கொள்வர்.
வட இந்தியர்களை பொறுத்தவரை துர்க்கா துன்பங்களை துடைத்து காப்பவள் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். இந்த நிலையில் அண்மையில் முதல்வர் “மம்தா பானர்ஜி” துர்க்கா சிலையை கரைப்பதற்கு தடை விதித்திருந்தார். ஆனால் குறித்த தடையை விலக்கி வட இந்திய மக்கள் துர்க்கா வழிபாட்டை மேற்கொண்டு, சிலையை கரைத்து பூஜையை நிவர்த்தி செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து அவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.