நாமக்கல் மாவட்டம் அருகே உள்ள திருச்சங்கோட்டில் முதியவரின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை ஒரு காகம் உடன் இருந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இறந்தவர் காகமாக வருவார்கள் என்பது இந்து மதத்தில் நம்பப்படுகிறது.
இந்நிலையில், திருச்செங்கோடு அருகே முதியவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு காகம் முதியவரின் இறுதி சடங்கு நடந்து முடியும் வரை அவர் அருகிலேயே இருந்துள்ளது. அங்குள்ளவர்கள் அதனை விரட்டியும், அது அங்கிருந்து செல்லவில்லை.
இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் அந்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரே காகமாக வந்து சென்றதாக முதியவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.