2100-க்குள் பூமி முழுவதும் அழியும் என்று அறிவியில் அறிஞர்கள் கணித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த கணிவியல் அறிஞர் டேனியல் கூறியதாவது:
பூமி உருவானதிலிருந்து, ஆர்டோவிசினியன், டெவோனியன், பெர்மியன்-ட்ராயாசின், ஜூராசிக் மற்றும் க்ரட்டாசியஸ் என்ற காலகட்டங்களில் பூமி மிகப்பெரிய பேரழிவை சந்தித்துள்ளது.
இந்த பேரழிவுகள் பல லட்சம் ஆண்டுகள் இடைவெளிகளில் நடந்துள்ளது. இவற்றை விட மிகப்பெரிய அளவில் 2100-ம் ஆண்டிற்குள் பேரழிவு ஏற்படும்.
புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு, தொழிற்சாலைகளால் வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைடு போன்றவற்றால், 300 முதல் 500 ஜிகா டன் அளவுக்கு கார்பன் கடலில் கலக்கும்.
இதனால், முதலில் கடலில் வாழும் உயிரினங்கள் அழியும். அதனைத் தொடர்ந்து நிலப்பகுதியில் வாழும் உயிரினங்களும் அழியும். இதனால் மீண்டும் ஒரு பேரழிவை பூமி சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார்.