முல்லைத்தீவு கேப்பாபிலவில் 111 ஏக்கர் காணி விடுவிக்கப்படுள்ளது

முல்லைத்தீவு கேப்பாபிலவில் படையினர் வசமுள்ள மிகுதி காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கேப்பாபிலவு இராணுவ முகாம்களில் இருந்து படையினர் வெளியேறிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கேப்பாபிலவு இராணுவ முகாமில் இருந்து வெளியேறும் இராணுவம்

64 பேருக்கு சொந்தமான 111 ஏக்கர் காணி விடுவிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் முகாம்களில் இருந்து படையினர் முற்றுமுழுதாக வெளியேறிய பின்னர் காணிகளை மாவட்ட செயலகம் உத்தியோகபூர்வமாக கையேற்கும் என்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.