இலங்கையில் மாறுவேடத்தில் பணிபுரியப் போகும் போக்குவரத்து பொலீஸார்

வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளைக் கண்டறிவதற்காக இன்று முதல் எதிர்வரும் சில வாரங்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்று கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

traffic-police

சிவில் ஆடையில் நடமாடும் காவல்துறையினர், சாதாரண வாகனங்களில் கொழும்பு நகரின் சில பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதன்போது வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளை அடையாளம் கண்டு, பின்னர் உத்தியோகபூர்வ ஆடையணிந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தையும் மதிக்கும் மற்றும் ஒழுக்கம் மிக்க சாரதிகளை உருவாக்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என்றும் காவல்துறை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.