மெதரிகிரிய – அம்பகஸ்கமுவ பிரதேசத்தில் குழந்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்தது.
தனது தாய்க்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு தனது தாயுடன் உறங்க சென்ற குழந்தை நேற்று அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்துள்ளது.
அதற்கமைய பிறந்து ஒரு மாதமும் 5 நாட்களுமான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இறக்கும் வரையில் குழந்தை ஆரோக்கியமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.