முகத்தின் சருமத்தில் ஏற்படும் முகப்பருக்கள், சரும சுருக்கம், பொலிவிழந்த முகம் போன்ற பிரச்சனைகளை தடுக்க அற்புதமான வழிகள்…
வெங்காயம் தேன் மாஸ்க் :-
வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் சிறிது தேன் மற்றும் 1 டீஸ்பூன் முல்தானி மட்டி பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, கழுவ வேண்டும்.
1 டீஸ்பூன் வெண்ணிற களிமண், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
ப்ளம்ஸ் மாஸ்க்:-
ப்ளம்ஸ் பழத்தை அரைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
பாதாம் தேன் மாஸ்க்:-
2 டீஸ்பூன் பாதாம் பொடியுடன், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.
ஆப்பிள் மாஸ்க்:-
1/2 ஆப்பிளை அரைத்து, அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 முட்டையின் மஞ்சள் கரு, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி உலர்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.