மாணவியை கற்பழித்த பிரபல சாமியார் கைது!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் 21 வயது கல்லூரி மாணவியை கற்பழித்த புகாரில் சாமியார் பலாஹரி மஹாராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

sami

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பலாஹரி மஹாராஜ் (70) என்ற சாமியார் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி வருகை தரும் பக்தர் ஒருவரது மகளான 21 வயது கல்லூரி மாணவி கடந்த 13-ம் தேதி போலீசின் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி இரவு சாமியார் பலாஹரி மஹாராஜ் தன்னை தனியாக அழைத்து ஆசிரமத்தில் வைத்து கற்பழித்ததாக கூறியுள்ளார். கடந்த மூன்று நாட்களாக இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் நேற்று சாமியார் மஹாராஜை கைது செய்தனர்.

மாஜிஸ்திரேடு முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட சாமியாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சாமியார் சிறையிலடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் அரியானா சாமியார் குர்மீத் ராம் கற்பழிப்பு குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.