நாளை முதல் காலநிலையில் மாற்றம்

நாளை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

w

செப்டம்பர் 25 மற்றும் 26ம் திகதிகளில் நாட்டின் காலநிலையில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மேல் மற்றும் தென் பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் கடும் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.