கொழும்பு கொள்ளுப்பிட்டி மற்றும் மருதானை பகுதிகளில் ஆயுர்வேத உடல்பிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கிய இரண்டு பாலியல் தொழில் விடுதிகளை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு நேற்று மாலை 6 அளவில் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய கொள்ளுப்பிட்டியில் இயங்கிய பாலியல் தொழில் விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார், அதன் முகாமையாளரான பெண்ணையும் மேலும் மூன்று பெண்களையும் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். இதனிடையே மத்திய கொழும்பு சட்டத்தை அமுல்படுத்தும் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் மருதானை சங்கராஜ மாவத்தையில் இயங்கிய பாலியல் தொழில் விடுதியை சுற்றுவளைத்ததுடன்
அங்கிருந்த ஆண் ஒருவரையும் 7 பெண்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 24, 32,48 மற்றும் 52 வயதானவர்கள் எனவும் இவர்கள் கிராண்ட்பாஸ், பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இன்று மாளிகாகந்தை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.