இயக்குநர் விஜய் மற்றும் பிரபுதேவாவும் இணைந்து எடுக்கும் இந்த பெயரிடப்படாத படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.
அவர், 10 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் என்கிறார்கள்.
இந்த கேரக்டரில் வேறெந்த நடிகையும் நடிக்க முன்வராத நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தைரியமாக ஓகே சொல்லியிருக்கிறார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயாக ஏற்கெனவே நடித்த ‘காக்கா முட்டை’ சூப்பர் ஹிட் என்பதால், துணிந்து இந்த முடிவை எடுத்துள்ளாராம்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, சாம் சி. எஸ். இசையமைக்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் எழுத, ஆண்டனி எடிட்டிங் செய்கிறார்.