அமெரிக்க அதிபர் ஒரு தற்கொலை தாரி என்றும். அவர் நடவடிக்கை அவரையே அழிக்கப் போகிறது என்றும் வடகொரிய, வெளியுறவு துறை அமைச்சர் நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையில் பேசியுள்ளது. பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. அவர் பேசியவேளை அதனை தடை செய்ய அமெரிக்கா பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதும். எதுவும் கை கூட வில்லை. ஏன் எனில் ஒரு நாடு என்ற வகையில். அன் நாட்டு அமைச்சர் ஒருவர் பேச, ஐ.நா மன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இந்த கால அவகாசத்தை நன்றாக பாவித்த வடகொரியா. தான் சொல்லவேண்டைய அனைத்து விடையங்களையும் சர்வதேச மன்றத்தில் வைத்து போட்டு உடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒரு தற்கொலை தாரி என்றும். அவர் தன்னை தானே அழிப்பதோடு அமெரிக்காவையும் அழிக்க உள்ளார் என்றும் வட கொரிய அமைச்சர் பேசியுள்ளார். அத்தோடு அமெரிக்காவின் B2 ரக விமானம், ஒரு முறை வட கொரியாவுக்கு அருகில் பறந்தால் கூட விளைவுகள் பெரிதாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். அமெரிக்க B2 விமானம் தமது எல்லையில் பறந்தால். அமெரிக்க மண்ணில் எமது ஏவுகணைகள் முத்தமிடுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ஐ.நா மன்றில் வைத்து நேரடியாக பேசி. அமெரிக்காவின் மானத்தை கப்பல் ஏற்றியுள்ளார் அமைச்சர்.
இதனால் அமெரிக்கா கடும் ஆத்திரமடைந்துள்ளதோடு. பெரும் போருக்கு போகாமல். அவர்கள் நிலைகளை மட்டும் தகர்த்து. வட கொரிய ராணுவ பலத்தை எவ்வாறு அடக்குவது என்று ரம் ஆராய்ந்து வருகிறார் என்று ஏஜன்சி செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.