சினேகன் தனது மதிப்பெண்ணை கணேசுக்கு அளித்தது ஏன்? நன்றி கடனை தீர்த்து கொண்டார்…!!
பிக்பாசில் இந்த வார எலிமினேஷனில் சினேகனின் மதிப்பெண் முக்கிய பங்கு வகிக்கிறது. சுஜா மற்றும் கணேஷ் ஆகிய இருவரும் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளனர். எனவே சினேகன் யாருக்கு தனது மதிப்பெண்களை அளிக்கின்றாரோ அவர்தான் காப்பாற்றப்படுவார்.
அதன்படி சினேகன் தனது மதிப்பெண்ணை கணேசுக்கு கொடுத்ததால் அவர் காப்பாற்றப்பட்டார். சுஜா கண்ணீருடன் வெளியேறினார். சினேகன் தனது மதிப்பெண்ணை கணேசுக்கு கொடுத்ததற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
கடந்த வாரம் சினேகனை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றியதே கணேஷ்தான். அந்த நன்றிக்கடனை தீர்த்து கொண்டார் சினேகன். மேலும் கணேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது முதலே உள்ளார். ஆனால் சுஜா 60வது நாளுக்கு மேல்தான் வந்தார்.
அதுமட்டும் அல்லாமல் கார் டாஸ்க் மற்றும் பலூன் டாஸ்குக்கு பிறகு சினேகனை எதிரி போல பார்த்தார் சுஜா. மேலும் சினேகனிடம் சரியாக கூட பேசவில்லை. இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் சினேகன் தனது மதிப்பெண்ணை கணேசுக்கு அளித்தார் என்று கூறப்படுகிறது. இதனால் சுஜா ஏமாற்றம் அடைந்தார்.