உயிருடன் உள்ள தனது மாமியார் இறந்து விட்டதாக மரண அறிவித்தலை அச்சிட்டு மரண சங்கத்திற்கு போலி தகவல்களை வழங்கி 22 ஆயிரம் ரூபாவை மோசடியாக பெற்று கொண்ட மருமகன் தொடர்பான தகவல் பொலன்றுவை – வெலிகந்த – ருவான்பிட்டிய கிராமத்தில் தெரியவந்துள்ளது.
குறித்த கிராமத்தை சேர்ந்த நபரொருவர் மரண சங்கத்திற்கு போலியான தகவலை வழங்கி பணத்தை மோசடியாக பெற்று கொண்டமை தொடர்பில் மரண சங்கத்தின் தலைவர் இன்று காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 18 ஆம் திகதி இறந்து விட்டதாக சந்தேக நபரான மருமகன், மரண அறிவித்தலை அச்சிட்டு, மரண சங்கத்தில் கொடுத்ததாகவும், பின்னர் அவரது மனைவியால் இந்த மோசடி தொடர்பில் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிகந்த காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.