18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு வாகனங்களை செலுத்தினால் அவர்களின் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட திருத்தங்களை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துவருதாக தெரிவிக்கும் அவர் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.