லண்டனில் டேஜன்ஹாம் பகுதியில் மர்ம பொருள் ஒன்று வானில் பறந்துள்ளது. இதனை அங்கு உள்ள கேரி லோயூ என்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
நள்ளிரவில் வானில் பறந்த அந்த பொருள் பிரகாசமான ஒளியுடன் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் வேகமாக பறந்து சென்றது.
இது ஏலியன்களின் சிக்னல்களாக இருக்குமோ என்ற ஆச்சரியத்தில், இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டதாக கேரி லோயூ தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து, UFO ஆராய்ச்சி சங்கத்தின் முன்னாள் இயக்குனரான பிலிப் மன்ல் கூறுகையில், மிக குறைந்த உயரத்தில் அந்த ஒளி, விமானத்தை விட வேகமாக செல்கிறது.
எனவே அது நிச்சயமாக விமானமாக இருக்க வாய்ப்பில்லை.
ஒரு வேளை ஆளில்லா விமானமாக இருக்கலாம், அல்லது இராணுவ விமானமாக இருக்கலாம். சூரிய உதயமாகும் நேரம் என்பதால் அதன் மீது ஒளிப்பட்டு பிரகாசமாக தெரிந்திருக்கலாம் என விளக்கமளித்துள்ளார்.