மேஷம்:-
சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்:-
உங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவார். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மிதுனம்:-
குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள் வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனு பவம் உண்டாகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோ கத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
கடகம்:-
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்:-
எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனா லும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். புது வேலை அமையும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் பங்குதாரர் களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கன்னி:-
கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர் கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபா ரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
துலாம்:-
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்படன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளை களின் பிடிவாதம் தளரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர் கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்:-
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். கணவன்-மனைவிக் குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மை யால் லாபம் குறையும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.
தனுசு:-
திட்டமிட்ட காரியங் களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் எதிர்த்துப் பேசு வார்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து போகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மகரம்:-
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வேற்றுமதத் தவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். மதிப்புக் கூடும் நாள்.
கும்பம்:-
பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அதி காரப் பதவியில் இருப்பவர் உதவுவார். வீடு, வாகனத்தை சீர் செய்வீர் கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதித்துக் காட்டும் நாள்.
மீனம்:-
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சில வேலை களை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். உடல் நலம் சீராகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் புது சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக் கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.