வடக்கு பொதுமக்களை ஏமாற்றி வரும் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் – டக்ளஸ் தேவானந்தா கடுமையான குற்றச்சாட்டு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பொதுமக்களை ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கடுமையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

images

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

வடக்கு முதலமைச்சர் பொய்களையும், பசப்பு வார்த்தைகளையும் கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றார்.

வடமாகாண சபை அமைக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்தும் அவர் பொதுமக்களின் நலனுக்காக எந்தவொரு செயற்திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

அதற்குப்பதிலாக தனது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்ளவே வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.