என் உடல் ஆரோக்கியம் என்னுடைய செயற்பாட்டில் தான் என்று பெருமிதத்தோடு சொல்கிறார் அவர்.
வட்டுக்கோட்டை, சுழிபுரத்தில் பிறந்தவர் செல்லத்துரை சரஸ்வதி. செப்ரெம்பர் 23 அவருக்கு நூறாவது பிறந்த நாள்.
இந்த வயதிலும் உடல் ஆரோக்கியத்தோடு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார் அவர்.
என் உடல் ஆரோக்கியத்திற்கு காரணம் அன்றாடச் செயற்பாடுகள் என்று குறிப்பிடும் பாட்டி, தான் எந்த இடத்திற்கு போவதாக இருந்தாலும் நடந்துசெல்வதையே வழக்கமாக கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்.
இந்த நடைப்பயிற்சியே என்னுடைய உடல் ஆரோக்கியத்திற்கு பிரதான காரணம் என்கிறார் பெருமிதத்தோடு.
1917 செப்ரெம்பர் 23ஆம் திகதி சரஸ்வதி பாட்டி, தொல்புரம் விக்கினேஸ்வரா, மூளாய் சைவப்பிரகாசா போன்ற பாடசாலைகளில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்ததாகவும் சொல்கிறார்.