பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூக வலைதளங்களில் மீம்ஸ், கேலி, கிண்டல்கள், விமர்சனங்கள் பறந்து கொண்டிருந்தாலும் இப்போது நிகழ்ச்சியே வேற லெவலில் போய்க்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று வெளியான பிரமோவில் மீண்டும் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்ற காட்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
ஆனால், அவர் ஓவியாதான் என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவிற்கு ரசிகர்கள் வட்டம் அதிகமானது.
ஓவியா ஆர்மி, ஓவியே நேவி என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் குழுக்கள் ஆரம்பித்து அவரை கொண்டாடினர்.
இதனிடையே ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார். மீண்டும் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளபட்டன. ஆனால், அவர் மறுத்து விட்டார்.
இந்த நிலையில், ஓவியா பிக்பாஸ் இல்லத்திற்குள் செல்வது போன்ற காணொளி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அவர் ஓவியாதான் என்பதை உறுதி செய்ய முடியவில்லை.
நாளைதான் தெரியும் அவர் ஓவியாவா இல்லையா என்பது..