அமெரிக்காவின் டென்னிஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் புகுந்து மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நேற்று நாஷ்விலி என்ற பகுதியில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
திடீரென தேவாலயத்தில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கியுள்ளார்.
இதனால் தேவாலயத்தில் இருந்தவர்கள் அலறியபடி அங்குமிங்கும் ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, தகவலறிந்து அங்கு வந்த பொலிஸார் படுகாயம் அடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.