இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரான, ஆமின் அகமது தோலியா தனது மகளுக்கு திருமண பரிசாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 8 பிளஸ் மொபைலை வாங்குவதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மொபைல் உலகின் ராஜாவான ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐ-போன் 8பிளஸ் ஆகிய மாடலை அறிமுகம் செய்தது. ஆனால் இவை குறிப்பிட்ட நாடுகளிலுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை கடைகளில் மட்டுமே முதற்கட்டமாக அறிமுகமானது.
அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள ஆப்பிளின் நிறுவனத்தில் நேற்று முன்தினம் புதிய ஐ-போன் மாடல்கள் நேரடி விற்பனைக்கு வந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், 13 மணி நேரம் வரிசையில் காத்திருந்து புதிய ஐ-போனை வாங்கிச் சென்றனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரான, ஆமின் அகமது தோலியா, தனது மகளுக்கு திருமண பரிசாக ‘ஐ-போன் – 8 பிளஸ்’ வாங்க முடிவு செய்து அதை வாங்குவதற்காக சிங்கப்பூருக்கே சென்றுவிட்டார்.
பின்னர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தனக்கு ஒன்று தன் மகளுக்கு ஒன்று என இரண்டு ஐ-போன்களை வாங்கிய பிறகு இந்தியா திரும்பியுள்ளார்.