அதிக எடை கொண்ட பாரங்களை ஏற்றி செல்லும் கனரக லாரிகளை ஓட்டி அசத்திக் கொண்டிருக்கிறார், பூனம் நெகி. 23 வயதான இவர் மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள ராரங் கிராமத்தை சேர்ந்தவர்.
அதிக எடை கொண்ட பாரங்களை ஏற்றி செல்லும் கனரக லாரிகளை ஓட்டி அசத்திக் கொண்டிருக்கிறார், பூனம் நெகி. 23 வயதான இவர் மத்திய பிரதேசம் மாநிலத்திலுள்ள ராரங் கிராமத்தை சேர்ந்தவர். நெகிக்கு நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் ஆர்வம் சிறு வயதிலேயே இருந்திருக்கிறது. அவருடைய மாமா கனரக வாகனம் ஓட்டியதை பார்த்து, அவர் மூலம் ஓட்டுனர் பயிற்சி எடுத்திருக்கிறார். அதன்பின்னர் முறைப்படி ஓட்டுனர் உரிமம் பெற்று தனியாக கனரக வாகனங்களை இயக்கி வருகிறார். மலைப் பாங்கான பகுதிகளில் லாரியுடன் அதிக தூரம் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
வளைவு, நெளிவான மலைப்பகுதியில் சாலைகளை கடப்பது நெகிக்கு சவாலான விஷயமாகவே இருக்கிறது. ஒருமுறை செங்குத்தான மலைப்பாதையான சிம்லா-கின்னயூர் நெடுஞ்சாலையில் சென்றபோது விபத்தில் சிக்கியிருக்கிறார். மலையை குடைந்து அமைக்கப்பட்ட குறுகிய சாலைகள், அபாயகரமான பள்ளத்தாக்கு பிரதேச சாலைகளில்தான் நெகியின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மிரட்சியுடன் லாரியை ஓட்டியவர் பின்பு சக ஆண் ஓட்டுநர்களை பார்த்து நுணுக்கங்களை கற்று தேர்ந்திருக்கிறார்.
17,582 அடி உயரத்தில் ஹார்டூங்க் லே பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான சாலைதான் நெகியின் கண்களை அதிகம் மிரட்சியடைய வைத்திருக்கிறது. ‘மரண பள்ளத்தாக்கு’ என ஓட்டுநர் களால் வர்ணிக்கப்படும் அந்த மலைச் சாலையில் பயமின்றி வாகனத்தை இயக்க வேண்டும் என்பதுதான் நெகியின் லட்சியமாக இருக்கிறது.