ஹிந்தியில் பிரபலாமான குயின் படத்தை தமிழில் “பாரீஸ் பாரீஸ்” என ரீமேக் செய்து வெளியிடுவதற்கான பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் பேசினார்.
அதில், “குயின் படம் இயல்பான படத்தை போல் அல்லாமல், காதல் தோல்வியடைந்த ஒரு பெண், தன் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எப்படி தன்னை மாற்றிக்கொண்டு செல்கின்றாள். அவளின் சிந்தனை எப்படி இருக்கின்றது என்பது தான் இப்பட கரு. ஹிந்தியில் உருவான இந்தபடம், தமிழில் காஜலின் நடிப்பில் உருவாகிறது.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்திற்கு ஹீரோவை தேர்ந்தெடுப்பதென்றால் சுலபம் இல்லை. அப்படி என் நினைவுக்கு வந்தவர் தான், சசி வருண்.
சசி பல கன்னட, தமிழ் படங்களில் நடித்தவர். அவர் பல விளம்பர படங்களிலும் நடித்தவர். அவரை ஒரு இடுப்பு வலி மருந்துக்கான விளம்பரத்திற்கு நடிக்க வைக்க பார்க்க சென்ற போது, முதலில் வருணின் இடுப்பை தான் பார்த்தேன். அவரின் இடுப்பை பார்த்த பின்னர் தான் அவரின் முகத்தையே பார்த்தேன்.
இப்படி எனக்கு என்ன தேவையோ அதை பார்ப்பதால், தயாரிப்பாளர் படத்திற்கு என்ன தேவையோ அதை நான் தருவேன் என என்மீது நம்பிக்கை வைத்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.