ஜெர்மன் நாட்டின் அதிபராக ஏஞ்சலா மெர்கல் 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜெர்மன் நாடாளுமன்றத்தில் உள்ள 598 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த முறை இந்த நாட்டின் நடந்த அதிபர் தேர்தலில் 311 இடங்களை பிடித்து சமூக ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து அதிபரானார் மெர்கல்.
அவரின் பதவிகாலம் முடிய உள்ள நிலையில், நேற்று 19வது நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்றது. நேற்று நடந்த வாக்குப்பதிவு மாலையில் முடிவடைந்தது.
வாக்கு எண்ணிக்கையில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் சார்பாக போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றர். அவரை தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சி 20.8% வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.
சிறப்பான ஆட்சியை கொடுத்ததால், 4வது முறையாக அதிபராக முடிந்ததாக கூறி ஏஞ்சலா மெர்கல், மற்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்