வீதியில் மரக்கறி விற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம்!!!

பிலிப்பைன்ஸில் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பாடசாலையில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார்.

chi

பொருளாதார சிக்கலால் பார்க்கவே அனுதாபப்படும் வகையில் ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் படம் ஒன்று அண்மையில் இணையத்தில் வைரலானது.

இதை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அந்நாட்டின் பிரபல நடிகையும், பாடகியுமான ஷரோன் குனெட்டா, சிறுவன் விற்கும் அனைத்து காய்கறிகளையும் தான் வாங்கி கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, குறித்த சிறுவனை பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்ப தான் நினைப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸில் வறுமை அதிகளவில் தலைவிரித்து ஆடுவதால் அந்நாட்டு சிறுவர்கள் பலர் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் குழந்தை தொழிலாளியாக வேலைக்கு செய்துவருகிறார்கள்.

இந்நிலையில் குறித்த நடிகையின் இந்த செயல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.