டெங்கு பரிசோதகர் போன்று வந்த திருடர்கள்

டெங்கு நோய் பரவும் இடங்களைப் பரிசோதிக்கும் சாக்கில் வீடுபுகுந்து கொள்ளையடித்த சந்தேக நபர் சீசிடீவி உதவியுடன் பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.

denku06

கடந்த 22ம் திகதி தெமட்டகொடைப்பிரதேசத்தில் தனித்து வசித்த செல்வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டில் டெங்கு நோய் பரவும் இடங்களைப் பரிசோதிக்கவுள்ளதாக கூறி ஒரு ஆண் உள்நுழைந்துள்ளார்.

உள்ளே வந்த அவர் தனியாக இருக்கும் மூதாட்டியின் வாயில் பிளாஸ்டர் ஒட்டி, கைகால்களையும் கட்டி வைத்துவிட்டு அங்கிருந்த பணம் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

இதன்பின்னர் அயலவர்கள் மூலம் தனது கட்டுக்களை அவிழ்த்துக் கொண்ட மூதாட்டி சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிசார் வந்து விசாரணைகளை மேற்கொண்ட போது மூதாட்டியின் மகள் ஒருவரின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒருவரின் மகனே கொள்ளைக்காரனாக வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடந்த 23ம் திகதி புத்தளத்தில் வைத்துக் கொள்ளைக்காரனைக் கைது செய்த பொலிசார் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பாதியையும் கைப்பற்றியுள்ளனர்.

கொள்ளைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் மூதாட்டியின் வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.