நடிகர் சங்க விவகாரம் தொடர்பில் மீண்டும் விஷாலுக்கு சிக்கல்

நடிகர் சங்க பணம் மோசடி வழக்கில் விஷால் கைதாகிறாரா..?

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பணம் மோசடியில் ஈடுபட்டதாக வராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்ட நட்டசத்திர கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நடிகர் சங்க பணம் மோசடி வழக்கில் விஷால் கைதாகிறாரா..?

இந்த நிகழ்சிசியை ஒளிபரப்ப தனியார் சேனல் ஒன்றிடமிருந்து நடிகர் சங்க நிர்வாகிகள் 6 கோடி லஞ்சம் பெற்றுள்ளனர். இதனால் சங்கத்திற்கு வரவேண்டிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

நடிகர் சங்க பணம் மோசடி வழக்கில் விஷால் கைதாகிறாரா..?

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், வாராகி தாக்கல் செய்த மனுவை சென்னை மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு துறைக்கு அனுப்பி வைத்ததோடு, புகாருக்கான முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.