அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அலுவலகத்தால் இயக்கப்படும் உளவுத்துறை செயற்கைக்கோள் ஒன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது. கலிபோர்னியா விமானப்படைத் தளத்திலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயற்கைக்கோளின் செயற்பாடு என்னவென்பது தொடர்பில் அதிகாரிகள் வெளிப்படுத்தவில்லை என்பதுடன், அதன் சுற்றுவட்டப்பாதை தொடர்பிலும் வெளிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஏனைய பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அலுவலகம் உளவுத்துறை தகவல்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.