விமானத்தில் எந்த இருக்கையில் அமர்ந்தால் பாதுகாப்பானது? வெளியான ஆய்வு தகவல்

விமானத்தில் பாதுகாப்பாக பயணிப்பது, பயணக் கட்டணத்தை சேமிப்பது, சரியான இருக்கையை தெரிவு செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்தான ஆய்வு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாதுகாப்பான இருக்கை எது? விமானத்தில் ஏறியதும் ‘எந்த இருக்கையில் அமர்ந்தாலும் நீங்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம்’ என பணிப்பெண்கள் கூறுவது உண்மை தான்.
_GenericHero_1168x606
எனினும், விமானப்பயணம் குறித்து அச்சம் கொண்டவர்கள் விமானத்தின் பின் வரிசை இருக்கையில் அமரலாம். ஏனெனில், விமான விபத்து நிகழ்ந்தால் பின் வரிசையில் உள்ளவர்களை விட 40 சதவிகிதம் கூடுதலாக முன் வரிசையில் உள்ளர்வர்களே உயிரிழக்கின்றனர். விமானக் கட்டணத்தை சேமிப்பது எப்படி? பொதுவாக, விமானப்பயணங்களை இறுதி நாட்களில் முடிவு செய்தால் அதன் கட்டணமும் அதிகமாகவே இருக்கும். இதனை தவிர்த்துக்கொள்ள 53 நாட்களுக்கு முன்னதாக பயணச்சீட்டை முன்பதிவு செய்தால் விலை மிகவும் மலிவாக இருக்கும்.
அதே சமயம், செவ்வாய்க்கிழமைகளில் பயணச்சீட்டை முன்பதிவு செய்தால் விலையும் குறைவாக இருக்கும் எனவும் வெள்ளிக்கிழமைகளில் முன்பதிவு செய்தால் விலை கூடுதலாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஜன்னல் இருக்கையை பெறுவது எப்படி? விமானத்தில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து இயற்கையை ரசிக்க பெரிதும் விரும்புவார்கள். இணையதள ஆப்களில் ஒன்றான Expert Flyer என்ற கருவி மூலம் நீங்கள் பயணிக்க உள்ள விமானத்தின் இருக்கை விபரங்களை முன்கூட்டியே அறிந்துக்கொண்டு முன்பதிவு செய்யலாம். பெரும்பாலான விமானங்கள் 335 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்ய தொடங்குவதால் மேலே கூறியுள்ள கருவி மூலம் இருக்கைகளை உறுதி செய்துக்கொள்ளலாம்.
ஒரு பயணி இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்யலாமா? விமானத்தில் பயணிக்கும்போது அருகில் அமர்ந்துள்ள சக பயணி அல்லது செல்லப்பிராணி உள்ளிட்டவைகளால் உங்களுக்கு தொந்தரவு ஏற்படுகிறதா? இதனை தவிர்ப்பதற்கு உங்கள் ஒருவருக்கு இரண்டு இருக்கைகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம். குறிப்பாக, ஜன்னல் இருக்கையையும், மூன்றாவது இருக்கையையும் முன்பதிவு செய்யலாம்.
பொதுவாக, இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் இருக்கும் இருக்கையில் அமர யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, மைய இருக்கையில் செல்லப்பிராணி அல்லது தொந்தரவு அளிக்கும் பயணி அமர்ந்தால் அவரை மூன்றாவதாக உள்ள உங்களது இருக்கையிலேயே அமர வைத்து விடலாம். கால்களை வசதியாக வைத்துக்கொள்ள வேண்டுமா? விமானத்தில் பயணிக்கும்போது கால்களை வசதியாக நீட்டி வைத்துக்கொள்ள பயணிகள் அனைவரும் விரும்புவார்கள். ஆனால், சில விமானங்களில் இந்த வசதி கிடைப்பதில்லை. இதனை தவிர்த்துக்கொள்ள விமானத்தில் எந்த இருக்கையில் இந்த வசதி உள்ளது என்பதை Seat Expert மற்றும் Seat Guru போன்ற ஆப்கள் மூலம் முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளலாம்.
இல்லையெனில், விமான நடைப்பாதையில் அமைந்துள்ள மூன்றாவது இருக்கையை தெரிவு செய்தால் கால்களை வசதியாக வைத்துக்கொள்ளலாம். குலுங்காமல் பயணம் செய்ய வேண்டுமா? நடுவானில் பயணம் செய்யும்போது நிகழும் இயற்கை சீற்றம் காரணமாக விமானம் குலுங்குவதற்கு வாய்ப்புள்ளது.
 இதனை தவிர்த்துக்கொள்ள விமான இறக்கைகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அமர்ந்துக்கொண்டால் விமானம் குலுங்குவது அதிகளவில் உணரப்படாது. நிம்மதியாக தூங்க வேண்டுமா? விமானத்தில் நெடுந்தூரம் பயணிக்கும்போது நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் விமானத்தின் மையப்பகுதியில் உள்ள இருக்கையை தெரிவு செய்ய வேண்டும்.
இயற்கை சீற்றத்தை இப்பகுதி அதிகளவில் உணராது. அதே சமயம், பின்னால் உள்ள கழிவறைக்கு செல்லும் பயணிகளின் தொந்தரவையும் தவிர்த்துவிட்டு நிம்மதியாக தூங்கலாம்.