டிரம்ப் மகள் போன்று மாற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை !!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப். இவர் டிரம்பின் அரசியல் ஆலோசகராக இருக்கிறார்.

imageproxy

அதிபர் மகள் என்பது மட்டும் இவரது சிறப்பு அம்சம் அல்ல. தன்னம்பிக்கை மிக்கவர். திறமையாக எதையும் துணிச்சலுடன் சமாளிக்க கூடிய அழகான பெண். அமெரிக்க குடிமகன்களில் முதல் குடும்பத்து பெண்மணி ஆவார்.

எனவே இவரைப் போன்று அழகான முக அமைப்புடன் திகழ அமெரிக்க பெண்களில் பலர் விரும்புகின்றனர். அதற்காக இவாங்கா டிரம்ப் போன்று மாற முகமாற்று ஆபரேஷன் செய்து கொள்கின்றனர்.

அதற்காக நியூயார்க்கில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நார்மன் ரோ என்பவரை நாடுகின்றனர். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இவாங்கா போட்டோவுடன் வந்து அவரைப் போன்று தங்களுக்கும் அழகிய முகம் வேண்டும் என கேட்கின்றனர்.

இத்தகைய அறுவை சிகிச்சை செய்ய ரூ.20 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை செலவாகிறது. அதைப் பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. டிரம்ப் மகள் போன்று மாற வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

ஒரு பெண் இவாங்கா போன்று மாற இந்த வருடத்தில் மட்டும் 13 தடவை சிகிச்சை செய்து இருக்கிறார்.