தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான எழிலன், படையினரிடம் சரணடையவில்லை என மேஜர் ஜெனரல் சானக குணவர்தன சாட்சியமளித்துள்ளார்.
எழிலன் காணாமல் போன விவகாரம் தொடர்பில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யபட்டு குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுகுறித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சாட்சியமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் எந்தவொரு தலைவரும் இராணுவத்திடம் சரணடையவில்லை எனவும் அவர் சாட்சியமளித்துள்ளார். எழிலனின் மனைவியும் வட மாகாண அமைச்சருமான ஆனந்தி சசிதரனினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.