யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது தாக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இன்று காலை இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட கைதியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளினால் தாக்கப்பட்ட கைதி புத்தளத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குற்றச் செயல் ஒன்றிற்காக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலே சிறைச்சாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கியுள்ளனர்.