சிறிய தந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவனொருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறைப் பகுதியை சேர்ந்த சிறுவனே இவ்வாறு கை முறிந்த நிலையில் யாழ். மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7 வயதுடைய குறித்த சிறுவன் தாயின் மறு கணவனால் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனின் தாயாரும் இதனைத் தடுக்காது பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவனின் தாயாரும் சிறிய தந்தையும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.