வெளிநாடொன்றில் பெண் உள்ளிட்ட இருவர் மீது இலங்கை இளைஞன் எசிட் தாக்குதல் நடத்தியுள்ளார்.
ஷார்ஜாவில் தனது மனைவி, அவரது காதலருடன் அறையில் இருந்த போது கணவர் எசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிகிழமை 30 வயதான இலங்கையை சேர்ந்த இளைஞரே இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், தாக்குதலின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தான் ஒருபோதும் வருத்தப்பட போவதில்லை என இலங்கையர் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞன் இரண்டு வருடங்களாக தனது மனைவியை காதலித்து கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் மனைவி இவ்வாறு நடந்து கொள்வார் என தான் ஒருபோது நினைத்ததில்லை எனவும் அவர் பொலிஸாரிடம்
குறிப்பிட்டுள்ளார்.
அவசர குடும்ப தேவைக்காக தனது தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டிய அவசியம் குறித்த இலங்கையருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்போது தனது மனைவி வேறு ஒரு நபருடன் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டதை அவதானித்த அவர் ஒரு வாரத்திற்கு முன்னரே ஷர்ஜா திரும்பியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கு சென்ற இலங்கையர் தனது மனைவிக்கு தெரிவிக்காமல் ஷார்ஜாவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். அங்கிருந்து தனது மனைவி அவரது காதலருடன் Nasiriyah பகுதியில் உள்ள வீட்டிற்கு செல்லும் வரை
அவதானித்துள்ளார். பின்னர் அவர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற மனைவி கதவை மூடமால் படுக்கை அறைக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த கணவர், இருவர் மீதும் எசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் அவர்களை உள்ளேயே வைத்து கதவை மூடிவிட்டு ஷார்ஜா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். எனினும் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான அவரது மனைவி அவரச சேவைக்கு அழைப்பேற்படுத்தியுள்ளார் அதற்கமைய அவரும் அவரது காதலரும் Al Kuwaiti hospital வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாவும், பெண்ணை விட ஆணின் நிலைமை தீவிரமாக உள்ளதெனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.