10 சிறுமிகளை திருமணம் செய்த ஓமன் நாட்டைச் சேர்ந்த முதியவர் 11-வது திருமணத்தில் சிக்கி கொண்டார்.
சமீபத்தில் கூட ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ. 5 லட்சம் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட செய்தி வெளி உலகிற்கு தெரிய வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுமியின் தாயார் போலீசில் புகார் கொடுத்த போதுதான் சிறுமியின் உறவினர்கள், முகவர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை முதியவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தியதில் ஐதராபாத் நகரில் சிறுமிகளை அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கும்பல் சிக்கி உள்ளது. ஐதராபாத் போலீஸ் இவ்விவகாரத்தில் 5 ஓமன் நாட்டவர்கள், 3 கத்தார் நாட்டவர்கள் மற்றும் மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று மத குருகளை கைது செய்து உள்ளது. திருமணம் செய்து வைக்கும் மத குருக்கள் போலியான திருமண சான்றிதழ் தயார் செய்து உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. சிறுமிகள் திருமணம் தொடர்பாக தகவல் கிடைத்து ஐதராபாத் போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் ஷேக் திருமண கும்பல் வசமாக சிக்கி உள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஓமன் நாட்டைச் சேர்ந்த முதியவர். இவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று கொள்வதற்காக ஓமனில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். அதன் பின்னர் ஹைதராபாத் சென்றவர் அங்கிருக்கும் புரோக்கர்களின் உதவியுடன் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார்.
அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்ததில் அவர் இதற்கு முன்னர் 3 முறை ஐதராபாத்திற்கு வந்துள்ளார்.
ஓமன் நாட்டை சேர்த்து இதுவரை 10 பெண்களை திருமணம் செய்துள்ள அவர், தற்போது 11 வது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் முயற்சில் ஈடுபட்டுள்ளார், பாஸ்போட்டில் இவரது வயதினை குறைத்து 65 ஆக மாற்றியுள்ளார்.
அதுமட்டுமின்றி, உடல்ரீதியான பிரச்சனைகள் மற்றும் கண்பார்வையும் இவருக்கு சரியாக தெரியவரவில்லை என போலீசார் கண்டறிந்துள்ளனர். தற்போது, இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் விற்பனை செய்யும் கும்பல் ஐதராபாத் மற்றும் அரபு நாடுகளில் புரோக்கர்களாக செயல்பட்டு உள்ளது. சிறுமிகளுக்கு போலியான வயது சான்றிதழ், பாஸ்போர்ட் என அனைத்தையும் பெற்று, சிறுமிகளை அரபு நாட்டவர்களுடன் அனுப்பி வைக்கும் வரையில் அனைத்து வேலையையும் இந்த புரோக்கர்கள் பார்க்கிறார்கள். அரபு நாட்டவர்கள் இந்தியாவிற்கு வந்து சிறுமிகளுடன் தங்குவதற்கும் வீடுகளையும், ஓட்டல்களையும் ஏற்பாடு செய்கின்றனர் எனவும் தெரியவந்து உள்ளது. இதுதொடர்பான விசாரணையில் மேலும் அதிர்ச்சி சம்பவங்கள் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2015-ல் ஐதராபாத்தில் ஒவ்வொரு வாரமும் 5, 6 சிறுமிகள் அரபு நாட்டவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலநிலை காணப்படுகிறது என போலீஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.