நியுசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை 8ஆவது உலக அதிசயமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த உலக அதிசயம் மற்ற 7 அதிசயங்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர் , சிடோனின் அண்டிப்பெற்றர் என்பவர்தான்.
இதற்கு முன்னர், ஹிரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கிருந்தனர். சீனப் பெருஞ்சுவர், எகிப்து பிரமிட்டுக்கள், ஈபில்டவர் மற்றும் தாஜ் மஹால் போன்றவை நாம் அறிந்த பெரும்பாலான அதிசயங்களில் சிலவாகும்.
இதைத்தொடர்ந்து 2006ஆம் ஆண்டு புதிய அதிசயங்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், உலகின் எட்டாவது அதிசயம் நியுசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எரிமலையின் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி ,சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உருவாகியுள்ளது.
இது சுற்றுல்லா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், இந்த தோற்ற அமைப்பு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இப்பகுதியை நியுசிலாந்தில் அரசு இதுவரைக்கும் பாதுகாப்பற்ற இடமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் விரைவில் இவ்விடத்தினை உலகின் 8ஆவது அதிசயமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.