தியாகத் தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தற்போது உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் யாழ். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தை சூழவுள்ள பகுதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நினைவிடத்தில் திலீபனின் உருவப்படமும் வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபடுவது போல தனது இருகரங்களையும் கூப்பி, இரு கண்களையும் மூடி ஆத்மார்த்தமாக வணக்கம் செலுத்தினார்.
குறித்த இளைஞரின் செயற்பாட்டைக் கண்டு அங்கு நின்ற சில சிங்கள மக்கள் நெகிழ்ச்சியடைந்ததுடன், குறித்த காட்சியைத் தமது கைத்தொலைபேசிகளில் புகைப்படங்களாக பதிவு செய்தனர்.
குறித்த இளைஞர் இவ்வருடம் தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் காலை வேளைகளில் நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்கு வருகை தந்து இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளதை தாம் கண்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர்.