இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தின் கோபால்கன்ஞ் பகுதியில் பிறந்து ஓரிரு நாட்களே ஆன மூன்று குழந்தைகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தின் கோபால்கன்ஞ் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் குழந்தைகளின் சடலங்கள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அங்கு சோதனை மேற்கொண்ட போது, மூன்று குழந்தைகள் பை ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் குப்பையில் விசப்பட்டு கிடந்துள்ளனர்.
இதேவேளை பையில் அடைக்கப்பட்டு குப்பையில் வீசப்பட்ட மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பிறந்து ஓரிரு நாட்களே ஆகியிருக்கும் என்றும், அதில் ஒரு ஆண் குழந்தை, இரண்டு பெண் குழந்தை எனவும், இது தொடர்பாக குழந்தைகளின் உடல்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைக்கு முடிவுக்கு பின்னரே விசாரணை நடத்தப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.