யாழில் 7 வயது மகனை துன்புறுத்திய சிறியதந்தை!!

யாழ்ப்பாணத்தில் சிறுவன் மீது கொடூர தாக்குதல் நடத்திய சிறிய தந்தை மற்றும் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

rawImage

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறிய தந்தை மற்றும் அதனை வேடிக்கை பார்த்த தாயையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் சிறிய தந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.

தவறொன்றை செய்ததாக கூறி சிறுவனை தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபர் கடுமையாக தாக்கியுள்ளர். இதன்போது சிறுவனின் தாயாரும் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிறுவனின் தாயாரும் சிறிய தந்தையும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.