ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று 2 முறை பேசினார்.
தனது பேச்சை முடித்த சில நிமிடத்திலேயே, கவுன்சில் வளாகத்தில் இலங்கையை சேர்ந்த 7 சிங்களர்கள் வைகோவை சூழ்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று 2 முறை பேசினார். தனது பேச்சை முடித்த சில நிமிடத்திலேயே, கவுன்சில் வளாகத்தில் இலங்கையை சேர்ந்த 7 சிங்களவர்கள் வைகோவை சூழ்ந்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வைகோவிடம் தகராறு செய்த சிங்களர்களில், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரும் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த குழுவில் இருந்த சிங்கள பெண் ஒருவர், இலங்கை பிரஜை இல்லாத நீங்கள் இலங்கையை பற்றி எப்படி பேசலாம்? என்று வைகோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு, ‘‘நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி ரத்த உறவு இருக்கின்றது. ஆகவே எனக்கு பேச உரிமை உண்டு’’ என்று வைகோ பொறுமையாக பதில் அளித்தார்.
சிங்கள பெண், வைகோவுடன் தகராறு செய்வதை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தனர். பொதுவாக மனித உரிமைகள் கவுன்சில் உள்ளே வைத்து யாரும் வீடியோ எடுக்கக்கூடாது. திட்டமிட்டு வைகோவை மனித உரிமைகள் கவுன்சிலுக்குள் வர விடாமல் தடுக்க செய்கின்ற சதி என்று ஈழத்தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.