முள்ளிவாய்க்கால் மேற்கு கிராமத்தில் கைக்குண்டுகள் கண்டுபிடுப்பு

முள்ளிவாய்க்கால் மேற்கு கிராமத்தில் வெடிக்கும் நிலையில் உள்ள கைக்குண்டுகள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

download13-720x450

 

முள்ளிவாய்க்கால் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த காணி உரிமையாளரொருவர் தனது காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த நிலையில் கைக்குண்டுகளை அவதானித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்த நிலையில், பொலிஸார் தலத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு காணப்படும் கைக்குண்டுகளை அகற்றி அழிப்பதற்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.